ஏற்காடு மலைப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்த 5 பேர் கைது

ஏற்காடு மலைப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-19 22:27 GMT
ஏற்காடு:
ஏற்காட்டில் உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றி உள்ளன. நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சிறிய அருவிகளில் ஒரு சிலர் குளித்தனர். இந்த நிலையில் போலீஸ் ரோந்து வாகனம் ஏற்காடு மலைப்பாதையில் சென்றது. அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே அரை நிர்வாணமாக 5 பேர் குளித்துக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் இவ்வாறு குளிக்கலாமா? பொது மக்களை தொந்தரவு செய்யாமல் குளித்து விட்டு கிளம்புங்கள் என கூறி உள்ளனர். அப்போது குளித்தவர்களை தட்டிக்கேட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் கனகவேலை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்ததாக பண்ருட்டி பண்டார கோட்டை பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (40), சந்தோஷ் குமார் (33), சதீஷ் (29), பிரவீன்குமார் (24), சதீஷ் (29) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்