கார் மோதி தொழிலாளி பலி

சிவகாசி அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2021-09-19 19:21 GMT
சிவகாசி, 
சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள பூலாவூரணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசெல்வம் (வயது 37). இவர் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த பழனிசெல்வத்தின் தலையின் மீது காரின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெல்வத்தின் தந்தை தேன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் சிவகாசி கட்டளைப்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் பரமசிவம் (50) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்