மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 53). இவர் நேற்று ஜிபுதூர் கிராமத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் மழையூர் சென்றுள்ளார். சுடுகாடு அருகே சென்றபோது எதிரே குட்டியம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சின்னத்தம்பி என்பவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், சேட்டு ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சேட்டு பலத்த காயம் அடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சேட்டுவின் மகன் சந்தோஷ் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செய்து வருகிறார்.