திருப்பூரில் ஆலங்கட்டி மழை

திருப்பூரில் ஆலங்கட்டி மழை

Update: 2021-09-19 16:30 GMT
திருப்பூர், 
திருப்பூரில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் திடீரென சடசடவென ஆலங்கட்டி மழை பெய்தது. சிறிய வடிவ பனிக்கட்டிகளாக ரோட்டில் சிதறி கிடந்தன. வீட்டின் முன் விழுந்த பனிக்கட்டிகளை சிறுவர், சிறுமிகள் கைகளில் வைத்து விளையாடி மகிழ்ந்தனர். வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் இரும்பு தகர மேற்கூரையில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அதிகம் சத்தம் கேட்டு சிறுவர்கள் அச்சமடைந்தனர். 

மேலும் செய்திகள்