வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
ஆழ்வார்திருநகரியில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தென்திருப்பேரை:
பாளையங்கோட்டை பரிசுத்த ஆவி தெருவை சேர்ந்த சுந்தர் மகன் கிருஷ்ணகுமார்(வயது 27). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பர் ஐயப்பனும், ஆழ்வார்திருநகரி பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது, முதலைமொழியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மாணிக்கராஜ் (34) வந்துள்ளார். கிருஷ்ணகுமார் அருகில் சென்ற மாணிக்கராஜ் நான் பெரிய ரவுடி, எனக்கு நீ பணம் கொடு என கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்த கிருஷ்ணகுமாருக்கு அவர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் இருந்த தப்பிய கிருஷ்ணகுமார், ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்கு பதிவு செய்து மாணிக்கராஜை கைது செய்தார். ஏற்கனவே மாணிக்கராஜ் மீது ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.