சிக்கராயபுரம் கல்குவாரியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரியில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கல்குவாரியில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டனர்.
இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்து கிடந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் முகத்தில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.கல்குவாரியின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் மர்ம நபர்கள் உடலை வீசி சென்றார்களா? கால் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.