சேலம் அன்னதானப்பட்டியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2021-09-18 22:33 GMT
அன்னதானப்பட்டி:
திருச்செங்கோடு மோர்பாளையம் அருகே பிள்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). பட்டதாரியான இவர் தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சேலம் சண்முக நகர் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா (19). பிளஸ்-2 முடித்து விட்டு கடை ஒன்றுக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் இருவரும் ஒரு திருவிழாவில் சந்தித்து பழகி உள்ளனர். நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலமாக மாறியது. இதற்கு இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 
இந்த நிலையில் காதல் தம்பதியான சரவணன்-மோனிஷா பாதுகாப்பு கேட்டு சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் தம்பதியை  அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்