டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி சென்ற பின், விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்ததால், டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-18 21:50 GMT
கொல்லங்கோடு:
கள்ளக்காதலனுடன் மனைவி சென்ற பின், விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்ததால், டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
டெய்லர்
கொல்லங்கோடு அருகே கல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது46), டெய்லர். இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். 
சுரேஷ் மனைவிக்கு பொன்னப்பநகரை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுரேஷ் மனைவி அவருடன் ஒரு வருடத்திற்கு முன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சுரேஷிடம், உன் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விடு என்று அவரின் கள்ளக்காதலன் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் சுரேஷ் அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்தவர்கள் உடனே கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரேஷின் தாயார் ராதா போலீசில் புகார்  செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்