தூத்துக்குடியில் அரசு தட்டச்சு தேர்வு
தூத்துக்குடியில் அரசு தட்டச்சு தேர்வு நடந்தது.
தூத்துக்குடி:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 1½ ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த அரசு தட்டச்சு தேர்வுகள் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.
தட்டச்சு தேர்வு
தமிழக அரசின் தொழில் கல்வித்துறை சார்பில் தட்டச்சு பயிலும் மாணவர்களுக்கு அரசு தட்டச்சு தேர்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அரசு தட்டச்சு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேர்வுகள் நாடு முழுவதும் நடக்கிறது. தட்டச்சில் லோயர், ஹையர், ஹை ஸ்பீட் என்ற 3 பிரிவுகளில் தேர்வுகள் நடக்கிறது.
3 ஆயிரம் மாணவர்கள்
தூத்துக்குடியில் நேற்று காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு தொழில் கல்வி கல்லூரியிலும் வைத்து இந்த தேர்வுகள் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 25 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு எழுத அனுமதிக்க பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.