வாலாங்குளத்தில் தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு

வாலாங்குளத்தில் தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு

Update: 2021-09-18 17:22 GMT
கோவை

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், ஆர்.எஸ்.புரம் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், எல்.இ.டி. தெரு விளக்குகள், குளங்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக வாலாங்குளம் ரூ.48 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உணவுக்கூடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவினர் கோவை வாலாங்குளத்தில் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உடன் இருந்தார். 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் குறித்து டெல்லி தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். 

அவர்கள், இந்த திட்டத்தில் மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கினர் என்றனர்.

மேலும் செய்திகள்