மின்சாரம் தாக்கி பெண் பலி
வந்தவாசியில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்க ஆச்சாரி. இவரது மனைவி மல்லிகா (வயது 57)இவர்களுக்கு வெங்கடேசன், மணிகண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று அதிகாலை மழை பெய்து நின்ற நிலையில், மல்லிகா தூக்கத்தில் இருந்து எழுந்து லைட்டை போட சுவிட்சை இயக்கியபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல்துறையினர் மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.