நீலகிரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா

நீலகிரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா

Update: 2021-09-18 15:07 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 318 ஆக உயர்ந்து உள்ளது. 

நேற்று 29 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் இதுவரை 31 ஆயிரத்து 755 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 367 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மொத்தம் 583 ஆக்சிஜன் படுக்கைகளில் 114 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 469 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்