வியாபாரியை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தனபிரகாஷ் (வயது42). வியாபாரி. இவர் தனது காரில் எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

Update: 2021-09-18 12:31 GMT
அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து 2 பேர் வந்து கொண்டிருந்தனர். காரை உரசுவது போல அவர்கள் வந்தபோது அதனை தனபிரகாஷ் தட்டி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தனபிரகாசுக்கு மிரட்டல் விடுத்து அவரது கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபிரகாசை மிரட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்ததாக கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த வாலிபர்களான பரத்காந்த் (24), அஜித்் குமார் (23) ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்