விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குண்டடம்,
குண்டடத்தை அடுத்த மேற்குசடையபாளையத்தை சேர்ந்தவர் கருணை பிரகாஷ். விவசாயி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கருணை பிரகாஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்துவிட்டார்.
இந்த நிலையில் கருணை பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.