சோழவந்தான்,
சோழவந்தான் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது20) என்பவர் தள்ளுவண்டியில் 10 சாக்கு மூடையில் மணலை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபாண்டியை கைதுசெய்த போலீசார் 10 சாக்கு மூடையில் இருந்த மணலை பறிமுதல் செய்தனர்.