கழிவுநீர் வாய்க்காலில் பெண் குழந்தை பிணம்
கழிவுநீர் வாய்க்காலில் பெண் குழந்தை பிணமாக கிடந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள நடுவலூர் தெற்குத்தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குழந்தை பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கனகராஜிக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கனகராஜ், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கழிவுநீர் வாய்க்காலில் இறந்து கிடந்தது 7 மாத பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கழிவுநீர் வாய்க்காலில் குழந்தையின் உடலை வீசி சென்றது யார்? கொலை செய்து குழந்தையின் பிணத்தை அங்கு வீசினார்களா? என்பது உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.