மேலும் 50 மாணவர்களுக்கு காய்ச்சல்

ஆலங்குளம் அருகே அரசு பள்ளியில் மேலும் 50 மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

Update: 2021-09-17 19:19 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மாறாந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். முதல் நாளில் 22 பேரும், நேற்று முன்தினம் 30 பேரும் காய்ச்சால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 50 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பள்ளிக்கூடத்தில் கடந்த 2 நாட்களாக மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று 23 ஆசிரியர்கள் உள்பட 104 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற மாணவர்களுக்கு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்