வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

வாலிபர் கொலையில் 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-17 19:15 GMT
வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரம் குருசாமி பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் விஜய் கணேஷ் (வயது 22). இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் டி.ராமநாதபுரம்-கூடலூர் ரோடு மொட்டைமலை பகுதியில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய் கணேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மொட்டைமலை பகுதிக்கு சென்று மது அருந்தியது தெரியவந்தது.

சம்பவத்தன்று விஜய் கணேஷ் நண்பர்களுடன் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதும், இதில் விஜய் கணேஷை நண்பர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக டி.ராமநாதபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (21), திருமலாபுரம் என்ற அருளாட்சிையச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் கோபி ஆனந்த் (22), மாடசாமி மகன் மகேந்திரன் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.4,440 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்