சுடுகாட்டில் நிலபுரோக்கரை கொன்று எரிப்பு
சிங்கம்புணரி சுடுகாட்டில் நிலபுரோக்கரை ெகான்று அவரது உடலை எரித்தனர். போலீசார் விரைந்து பாதி எரிந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி சுடுகாட்டில் நிலபுரோக்கரை ெகான்று அவரது உடலை எரித்தனர். போலீசார் விரைந்து பாதி எரிந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுடுகாட்டில் பாதி எரிந்த உடல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பொது மயானத்தில் ஒருவரது தலை சிதைக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கொலை செய்யப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாதி எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் புகைப்படத்தை வைத்து கொலை செய்யப்பட்டவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நிலபுரோக்கர்
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை மாவட்டம், அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்த கைலாசம் மகன் ராமசந்திரன்(வயது 62) என்பதும் நிலபுரோக்கர் என்றும் தெரிய வந்தது. இவர் சிங்கம்புணரியில் ஏற்கனவே வசித்து வந்து உள்ளார். இதன் காரணமாக அடிக்கடி சிங்கம்புணரி வந்து செல்வதுண்டு. இங்குள்ள சுடுகாட்டில் உள்ள மண்டபத்தில் ஓய்வு எடுப்பது வழக்கம். மது பழக்கம் இவருக்கு உண்டு. ஆதலால் அந்த வகையில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு நேற்று முன்தினம் ராமசந்திரன் சுடுகாட்டுக்கு வந்து அங்கு மண்டபத்தில் தங்கி இருக்கலாம். அவருடன் மது குடித்தவர்களோ அல்லது முன்விரோதம் காரணமாக அவருக்கு வேண்டாதவர்கள் யாரோ அங்கு வந்து அவர் தலையை சிதைத்து கொலை செய்து உள்ளனர். தலையில் வெட்டு காயமும் உள்ளது. ரத்தம் அந்த பகுதியில் உறைந்து கிடக்கிறது. அதோடு இலை சருகுகளை சேகரித்து அவர் உடல் மீது போட்டு தீ வைத்து உள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் சருகு பற்றி எரியாமல் பாதி அணைந்து விட்டது. அதனால் தான் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் உடல் கிடைத்து உள்ளது. நிலபுரோக்கர் என்பதால் நிலம் வாங்குவது விற்பது தொடர்பாக ஏதேனும் தகராறு இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
-------