மின்னல் தாக்கி தொழிலாளி சாவு

திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.

Update: 2021-09-17 18:55 GMT
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பெரியகீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியய்யா. இவருடைய மகன் பாண்டிச்செல்வம் (வயது 32). விவசாய கூலி தொழிலாளி. இந்த நிைலயில் நேற்று இவர் வயல்காட்டில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
உடனே விதைப்பு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பாண்டிசெல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அறிந்ததும் அவரது மனைவி சூர்யா, பாண்டிச்செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 
பின்னர் பெரியகீரமங்கலம் ஊராட்சி தலைவர் சரளாதேவி ரெத்தினமூர்த்தி சம்மந்தப்பட்ட வருவாய்துறை, போலீசாருக்கு தகவல் ெதரிவித்து உள்ளார். தகவலறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக தாசில்தார் செந்தில்வேல் முருகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மின்னல் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்