மின்கம்பி அறுந்து விழுந்து 16 ஆடுகள் பலி
கமுதி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 16 ஆடுகள் உயிரிழந்தன..
கமுதி,
கமுதி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 16 ஆடுகள் உயிரிழந்தன..
பலத்த மழை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில், மணக்குளம் கிராமத்தை சேர்ந்த இருளாண்டி(வயது 52) என்பவர், ஆட்டு கிடை அமைக்க 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் நின்றிருந்தார். அப்போது மழை ெதாடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
16 ஆடுகள் செத்தன
இந்தநிலையில், சில ஆடுகள் அலறியப்படியே விழுந்து உயிருக்கு போராடின. சத்தம் கேட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் இருளாண்டி பார்த்தார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் எதிர்பாராமல் மிதித்த ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மின்சாரம் தாக்கி துடிதுடித்து செத்ததை கண்டார். எனவே சுதாரித்து மற்ற ஆடுகளை வேறு திசையில் விரட்டினார்.
பின்னர் இது குறித்து உடனடியாக அவர் மின்வாரியத்துக்கும், அபிராமம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். மின்வாரியத்துறையினர் அங்கு வந்து மின்இணைப்ைப துண்டித்தனர். இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி் 16 ஆடுகள் பலியானது தெரியவந்தது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இது குறித்து இருளாண்டி கூறும் போது, “நல்லவேளை நான் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதிக்கவில்லை. கடவுள் அருளால் உயிர் தப்பினேன். மின்சாரம் தாக்கி பலியான 16 ஆடுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
---------------