திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் தயார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 4 வாக்குகளை அளிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணிகள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் கூறியதாவது:-
வாக்குப்பெட்டிகள்
ஒவ்வொரு ஒன்றியத்திலும் வாக்குப்பெட்டிகள் தயார் செய்யப்பட்டு விட்டது. தற்போது கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் தேவைப்படுகிறது. இதற்காக கேரளா மாநிலத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.