சங்ககிரியில் 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்-வாலிபர் கைது

சங்ககிரியில் 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-16 22:55 GMT
சேலம்:
சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று மாலை சங்ககிரி ஒருக்காமலை மேட்டங்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த டேங்கர் லாரியை ஆய்வு செய்தபோது, அதில் 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பட டீசலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த லாரியில் உதவியாளராக இருந்த ரமேஷ் (வயது30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் லாரி உரிமையாளர் கண்ணன் என்பவர் தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்