சிறுமி கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- சேலம் மகிளா கோர்ட்டு உத்தரவு
சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம்:
சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்
தாரமங்கலம் அருகே மேட்டுமாறனூர் ஆரூர்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 24). இவர், கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இதையடுத்து குமாரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.