நண்பர்களுடன் மீன்பிடித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

நண்பர்களுடன் மீன்பிடித்தபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார்.

Update: 2021-09-16 21:16 GMT
திருவொற்றியூர்,

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் ரஞ்சன்குமார் (வயது 13). இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை ரஞ்சன்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து எர்ணாவூர் முருகன் கோவில் அருகே ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குட்டையில் மீன்பிடித்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குட்டைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு எண்ணூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு குட்டையில் இருந்து மாணவன் ரஞ்சன்குமாரை பிணமாக மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்