ெரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ெரயிலில் அடிபட்டு முதியவர் பலி

Update: 2021-09-16 21:01 GMT
ராஜபாளையம்
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் துரைசாமிபுரம் எதிரே ெரயில் தண்டவாளம் அருகே ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ெரயில்வே போலீசார் விசாரித்ததில், இறந்து கிடந்தவர் பெரிய சுரைக்காய்பட்டியை சேர்ந்த சீனிபாண்டியன்(வயது 62) என தெரியவந்தது. மேலும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற ெரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்