அரசலாற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்- புகார் பெட்டி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அரசலாறு உள்ளது.

Update: 2021-09-16 20:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அரசலாறு உள்ளது. இந்த நீர் மகாமககுளத்துக்கு செல்கிறது. இத்தகைய சிறப்பு கொண்ட அரசாற்றில், தினமும் குப்பைகள், கோழி, ஆடுகளின் இறைச்சி கழிகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இந்த கழிவுகள் நீரில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி அரசலாற்றின் படித்துறை பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசலாற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-மணிகண்டன், கும்பகோணம்.

மேலும் செய்திகள்