பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கணித ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-16 20:03 GMT
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(வயது 57). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 
இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளனர். 
‘போக்சோ’ சட்டத்தில் கைது
மாணவிகளின் புகாரை தொடர்ந்து பள்ளியின் சார்பில் ஆசிரியர் சேகரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 
இந்த புகாரின் பேரில் கணித ஆசிரியர் சேகரை போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்
கைதான ஆசிரியர் சேகர் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்