ஆட்டோ டிரைவர் கொலை

தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வக்கீலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-09-16 19:19 GMT
தென்காசி:
தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வக்கீலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆட்டோ டிரைவர்

தென்காசி அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமகிருஷ்ணன் (வயது 41), ஆட்டோ டிரைவர்.
இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் வக்கீலாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று இரவு ராமகிருஷ்ணனின் வீட்டின் முன்பு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

கொலை

தகராறு முற்றியதில் சதீஷ்குமார், ராமகிருஷ்ணனை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சதீஷ்குமார் அவரை காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ராமகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வக்கீல் சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்