தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கூடங்குளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-16 19:02 GMT
கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தை சேர்ந்தவர்  செல்வராஜ் (வயது 52). விவசாய கூலித்தொழிலாளி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக செல்வராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்