கே.சி.வீரமணியின் உதவியாளர் வீட்டில் சோதனை
அரக்கோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வீடு, கல்லூரி, அலுவலகம் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நாளில் 35 இடங்களில் இந்தசோதனை நடைபெற்றது.
அதன்படி கே.சி.வீரமணியின் உதவியாளராக இருந்த ஷியாம் குமார் என்பவருக்கு சொந்தமான அரக்கோணத்தில் உள்ள வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.
நீட் தேர்வை திசை திருப்ப
சோதனைக்குப் பின்னர் வெளியே வந்த ஷியாம் குமார் கூறுகையில் வீட்டின் ஒவ்வொரு அறையாக அவர்களுக்கு அழைத்துச்சென்று காண்பித்தேன். அப்போது வீட்டில் இருந்த வங்கி பாஸ் புத்தகம், இன்ஸ்சூரன்ஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு கட்டியதற்கான லோன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மட்டுமே என்னிடம் இருந்தது. அது சம்பந்தமாக கேட்டறிந்தனர்.
வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் குறித்து கேட்டனர். அதை வங்கி ஏ.டி.எம்.மிலிருந்து பெறப்பட்ட ரசிதை காண்பித்தேன். அதனை சரி பார்த்த பின்னர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர். வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்ல வில்லை. இந்த சோதனை நீட் தேர்வு பிரச்சினைைய திசைதிருப்பவும், உள்ளாட்சி தேர்தலுக்காகவும் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.