வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
நாங்குநேரி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவலாளி
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு தெற்கூரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 55). இவர் ஒரு தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக சாலையைக் கடந்து கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் ராமையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிரிழந்தர்.
ஆட்டோ டிரைவர்
களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் (50). ஆட்டோ டிரைவரான இவர் களக்காட்டில் இருந்து கோவைகுளத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். மூன்றடைப்பு நான்கு வழி சாலையைக் கடக்க முயன்ற போது நெல்லை நோக்கி சென்ற கார் ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முகைதீன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகைதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கள் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.