பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்

பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்

Update: 2021-09-16 17:57 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு, சாமுண்டி தெருவில் வசித்தவர் கண்ணாயிரம் (வயது 65). இவர் ெரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார், இவருடைய மனைவி செந்தாமரைச்செல்வி மற்றும் மகன்களான டாக்டர் காந்தி. என்ஜினீயர் ஸ்ரீகாந்த் ஆகிேயார் பெங்களூருவில் இருந்து வருகின்றனர். 

 மனநிலை பாதித்த கண்ணாயிரம் பில்லாந்திப்பட்டில் உள்ள வீட்டில் தனியாக ஆதரவற்ற நிலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அவர
து வீட்டில் இருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு பார்த்ததில் கண்ணாயிரம் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து பெங்களூருவில் வசித்து வரும் இவருடைய மனைவி செந்தாமரைச் செல்வி மற்றும் மகன்களுக்கு போலீசார் தகவல் அனுப்பி வரவழைத்தனர்.
இதனை தொடர்ந்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி வழக்குப்பதிவு செய்து கணங்ணாயிரம் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்