காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை
காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை
காரைக்கால், செப்-
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மதிப்பூதியத்தில் பணி புரிந்த 221 அங்கன்வாடி ஊழியர்கள், 172 உதவியாளர்கள் கடந்த 13-ந் தேதி பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் காரைக்காலை சேர்ந்த பணி நிரந்தரம் செய்யாமல் விடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென்று அலுவலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.