விமானத்தில் கடத்திய 3.8 கோடி தங்கம், சிகரெட் பறிமுதல்
விமானத்தில் கடத்திய 3.8 கோடி தங்கம், சிகரெட் பறிமுதல்
கோவை
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.3.8 கோடி தங்கம், சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
கோவை விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கடந்த 13-ந் தேதி வந்தது. இதில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அந்த விமானத் தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில், அந்த விமானத்தில் வந்த 6 பேரின் நடவடிக்கையில் அதிகாரிக ளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவர்களின் உடை மைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை.
இதைய டுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் சோதனை செய்த போது, தங்கத் தை சிறியதாக உருக்கி ஆசனவாய் பகுதியில் வைத்தும்,
தாங்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்தும் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
தங்கம் பறிமுதல்
மேலும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,985 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.16 கோடி சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.8 கோடி ஆகும்.
விசாரணையில், அவர்கள் 6 பேரும் சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், சார்ஜாவில் கூலித்தொழில் செய்து வந்ததும்,
அங்கு இருந்து கோவைக்கு கமிஷன் அடிப்படையில் தங்கம், சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
6 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை. பின்னர் அவர் கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.3.8 கோடி தங்கம், சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.