விளாத்திகுளத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.37 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

விளாத்திகுளத்தில் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.37 ஆயிரம் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2021-09-16 15:13 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியலுள்ள கணிராஜ் மகன் ஜெயராஜ் வயது (வயது 45) என்ற வியாபாரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜை கைது செய்தனர். அவரது வீட்டில் பதுக்கி இருந்த ரூ.37ஆயிரம் மதிப்பிலான 1,354 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்