கூடலூர் பாண்டியாற்றில் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் உடல் மீட்பு
கூடலூர் பாண்டியாற்றில் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் உடல் மீட்பு
கூடலூர்
கூடலூர் அருகே உள்ள பாண்டியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்தவர் கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் வேலுச்சாமி (வயது 65) என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.