மதுரவாயல் மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்; மின்சார வாரியம் நடவடிக்கை

சென்னை மின்சார பகிர்மான வட்டம், அண்ணாநகர் கோட்டத்தின் கீழ் உள்ள மதுரவாயில் தெற்கு பிரிவில் கணக்கீட்டு ஆய்வாளராக பி.ஜெயவேலு பணியாற்றி வந்தார். இவர் கணக்கீட்டு பணியை விதிமுறைப்படி சரியாக செய்யாததால் மின்சார நுகர்வோர் பாதிப்படைவது குறித்து மின்சார வாரியத்திற்கு புகார் வந்தது.

Update: 2021-09-16 10:41 GMT
இதுதொடர்பாக கள ஆய்வு செய்யப்பட்டதில் அவர் மீது சுமத்தப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டது. எனவே விதிமுறைகளின் படி மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் பி.ஜெயவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கணக்கீட்டுப் பணியில் உள்ள பணியாளர்கள் தனது கணக்கீட்டுப் பணியை தவறில்லாமல் சரியாக பணிபுரிவதுடன், மின்நுகர்வோர்கள் பாதிப்படையாத வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்