பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சீபுரம்,
மறைந்த முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தாசில்தார் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், தி.மு.க. நிர்வாகி வக்கீல் துரைமுருகன் ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கண்ணபிரான் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்களை வழங்கினார்.
ம.தி.மு.க. சார்பில் மாநில ம.தி.மு.க. நிர்வாகி மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் இ.வளையாபதி, நெசவாளர் அணி நிர்வாகி ஏகாம்பரம் உள்பட திரளானோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.