பொன்னேரி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பொன்னேரி,
பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சியில் அடங்கியது காவல்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கடந்த சில நாட்களாக பஸ்கள் நின்று செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு பஸ்கள் காவல்பட்டி கிராம பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.