விருதுநகர்
மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.