தினத்தந்தி புகார் பெட்டிக்கு 893965888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வந்துள்ளன.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 893965888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வந்துள்ளன.
சாலை வசதி செய்யப்படுமா?
நிலக்கோட்டை 8-வது வார்டு அன்னைநகரில் சாலை வசதி செய்யப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஜெயசூர்யா, நிலக்கோட்டை.
முறையாக பஸ்களை இயக்க வேண்டும்
வேடசந்தூர் தாலுகா மாரம்பாடியில் இருந்து வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாரம்பாடிக்கு முறையாக பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகர், மாரம்பாடி.
இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்
நிலக்கோட்டை தாலுகா பச்சமலையான்கோட்டை ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் கிராம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவாசகம், புதுச்சத்திரம்.
தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்
பழனி சிங்கப்பெருமாள் கோனார் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், பழனி.
தெருவிளக்கு வசதி செய்ய வேண்டும்
திண்டுக்கல் வேடப்பட்டி பி.பி.எம். நகரில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே தெருவிளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகஜோதி, வேடப்பட்டி.