அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

Update: 2021-09-15 18:05 GMT
அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா அறிகுறியும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் 2 நாட்கள் விடுமுறையில் இருந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட ஆசிரியை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியை 9-ம் வகுப்பிற்கு சென்று பாடம் நடத்தியுள்ளார். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அரசு பள்ளியில் ஆசிரியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்