பகண்டை கூட்டுரோடு அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி

பகண்டை கூட்டுரோடு அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி

Update: 2021-09-15 17:33 GMT
ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு குளத்து மேட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் குபேரன்(வயது 9). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். குபேரன் அவரது தம்பி வேலு(8) மற்றும் நண்பர்கள் சஞ்சய், ஆகாஷ், லேவின் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குபேரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினான். 

இதைப்பார்த்து அவனது தம்பி வேலு மற்றும் நண்பர்கள் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய குபேரனை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதுகுறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்