கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தலைஞாயிறு, கீழ்வேளூரில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-15 17:28 GMT
வாய்மேடு:
தலைஞாயிறு, கீழ்வேளூரில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய தலைவர் பாப்பாத்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் சுபா தேவி, ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேணு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கான தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க ேவண்டும். கொரோனா  தடுப்பூசியை அனைவருக்கும் விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி்னர். 
கீழ்வேளூர்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மாலா, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சாந்தி, விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மீரா மற்றும்  மாதர் சங்க ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 
கீழையூர் 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுசீலா தலைமை தாங்கினார். இதில் மத்திய கமிட்டி உறுப்பினர் அமிர்தம் பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் புனிதா, ராஜலெட்சுமி மற்றும்  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்