மானாமதுரை,
மானாமதுரை அருகே உடைகுளம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துச்செல்வம் மற்றும் மாணவன் பழனிமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம்- மதுரை 4 வழிச்சாலையில் சங்கமங்கலம் பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 மாண வர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.