திருப்பத்தூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 40 ஆயிரம்பேருக்கு தப்புசி போடப்பட்டதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 40 ஆயிரம்பேருக்கு தப்புசி போடப்பட்டதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 485 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடந்தது. திருப்பத்தூர் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை கண்காணிப்பு அலுவலரும் மீன்வளத்துறை கூடுதல் ஆணையருமான சஜ்யன்சிங் ஆர்.சவான், கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நாட்டறம்பள்ளி தொடக்கப்பள்ளி, வாணியம்பாடி வட்டம் புதூர் நகராட்சி இந்து தொடக்கப்பள்ளி, செட்டியப்பனூர் ஊராட்சி அங்கன்வாடி பள்ளி, கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொட பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கொரோனா தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலர் முகாமிற்கு வந்த பொது மக்களிடம் உங்களுக்கு தகவல் எப்படி கிடைத்தது என கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடமும், செவிலியர்களிடமும் எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும். எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது என்றும் கேட்டறிந்தார்.
ஆம்பூர்
பின்னர் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலரும், கலெக்டரும் பார்வையிட்டனர். இந்த முகாமில் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. தனது 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளின் போது சப்-கலெக்டர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி, தாசில்தார்கள் சிவபிரகாசம், பூங்ங்கொடி, மோகன், அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனவாளன், சித்ரகலா, ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.