திருப்பூரில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் நகையை மர்ம ஆசாமி அபேஸ் செய்தார்.

திருப்பூரில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் நகையை மர்ம ஆசாமி அபேஸ் செய்தார்.

Update: 2021-09-12 18:00 GMT
திருப்பூர்
திருப்பூரில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் நகையை மர்ம ஆசாமி அபேஸ் செய்தார். இது தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் பஸ் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
1½ பவுன் நகை அபேஸ்
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் ரோசிலி (வயது 30). இவர் திருப்பூருக்கு ஒரு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காலை வந்தார். இதன் பின்னர் மதியம் கண்டியன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்தார். 
இந்நிலையில் அரசு பஸ்சில் 70 பயணிகள் இருந்தனர். இதற்கிடையே அரசு பஸ் தெற்கு போலீஸ் நிலையம் அருகே வந்த போது, ரோசிலியின் கைப்பையில் வைத்திருந்த 1½ பவுன் நெக்லஸ் காணவில்லை. மர்ம ஆசாமி யாரோ அபேஸ் செய்துவிட்டார். 
போலீசார் சோதனை 
இதனால் நகையை காணவில்லை என ரோசிலி கூச்சலிட்டார். தொடர்ந்து தெற்கு போலீஸ் நிலையம் அருகே இருந்ததால், அரசு பஸ் போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் அரசு பஸ்சில் பயணம் செய்த சக பயணிகள் 70 பேரிடம் போலீசார் சோதனை செய்தனர். 
ஆனால் நகை யாரிடமும் இல்லை. இது தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் ரோசிலி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும், இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்