காரில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் சிக்கினார்
தாடிக்கொம்பு அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் போலீசார் தாடிக்கொம்பு அருகே அகரம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரில் 109 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.54 ஆயிரத்து 600 ஆகும். காரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கிரியம்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.