பாதையை மறைத்து கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால்

வேடசந்தூரில் பாைதயை மறைத்து கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-09-12 17:14 GMT
வேடசந்தூர்: 

வேடசந்தூர் ஆத்துமேட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்துமேட்டில் கணபதி நகர் செல்லும் பாதையை மறைத்து கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கணபதி நகர் செல்லும் வழியில் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்